குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியை குறைத்து சருமத்தை மென்மையாக மாற்ற இந்த டெக்னீக பாலோவ் பண்ணுங்க …!!

November 1, 2022 at 1:51 pm
pc
  • பொலிவான மற்றும் மென்மையான சருமத்தை தான் அனைவரும் பெற விரும்புவோம். ஆனால், பருவநிலை மாற்றம் அதை பெற விடுவதுக்கிடையாது. குறிப்பாக குளிர்காலம் வந்துவிட்டாலே சருமம் மிகவும் வறண்டு போய் அங்காங்கே வெடிப்பு, அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குளிர்காலத்தில் வறண்ட என்பது சாதாரணம் என்றாலும், கவனிக்காமல் விட்டுவிட்டால் சருமத்தில் இருக்கும் மொழுப்பு அமிலங்கள் குறைந்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • ஆகவே, குளிர்காலத்தில் தாகம் எடுக்காவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய காய்கறிகள், நிர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவைனைத்தும் சருமத்தில் ஈரப்பதத்தை இயற்கையாக தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், குறைந்த ஒரு நாளில் 3 முறையாவது மாய்ஸ்ரைசர் பயன்படுத்துங்கள். இப்போது சரும வறட்சியை போக்கும் எளிய இயற்கை வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.
  • தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 டீஸ்பூன் ஆகியவற்றை நன்றாக குழைத்து, முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவிடுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வறட்சியை போக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும். இந்த குளிர்காலத்திலும் சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
  • ஒரு கப்பில் தேவையான அளவு பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு காட்டன் துணியில் நனைத்து சருமத்தில் மென்மையாக தடவி, சிறிது நேரம் விட்டு கழுவினால் சருமத்தில் இருக்கும் வறட்சியெல்லாம் காணாமல் போய்விடும். அல்லது பாலை இரவில் தூங்க செல்வதற்கு முன்புக்கூட தடவி கொண்டு, மறுநாள் காலை கழுவினாலும் சருமம் மென்மையாக இருப்பதோடு, மினுமினுப்பாகவும் இருக்கும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இவற்றில் ஏதோ ஒன்றை குளிக்க செல்வதற்கு முன்பு உடல் முழுவதும் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 1 மணி நேரம் ஊறவிடுங்கள். அதன்பின், வெதுவெதுபான தண்ணீரில் குளித்துவிடுங்கள். இதை வாரத்தில் 3-4 முறை செய்து பாருங்கள், குளிர்காலத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் சருமம் மென்மையாக பிரகாசமாக இருக்கும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website