குழந்தைக்கு இதயத்தில் 2 ஓட்டைகள்… பிறந்த 3 மாதத்தில் அறுவை சிகிச்சை -அழுத நடிகை!

August 7, 2023 at 9:52 pm
pc

தூம் 2 உள்ளிட்ட பல பிரபல பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பிபாஷா பாசு. நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். 

அதிக ரசிகர்களை கவர்ந்த பிபாஷா பாசு கடந்த 2016ம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

2016ம் ஆண்டு திருமணம் ஆனாலும், கடந்த 2022ம் ஆண்டு தனது 43 வது வயதில்தான் பிபாஷா பாசு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மகளுக்கு தேவி என பெயரிட்டு உள்ளனர். 

சமீபத்தில் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலம் முடியாமல் போக, டாக்டர்கள் குழந்தை பிறக்கும்போதே இதயத்தில் இரண்டு ஓட்டைகளுடன் பிறந்துள்ளது என்றும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே மருத்துவமனைக்கு சென்று குழந்தைக்கான சிகிச்சையிலேயே மொத்த நேரத்தையும் செலவழித்து வரும் நடிகை பிபாஷா பாசு, சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த தகவலை சொல்லி அழுது விட்டார். 

எந்த தாய்க்கும் இப்படியொரு நிலைமை வரக்கூடாது என பிபாஷா பாசு உருகியதை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இது குறித்து பிபாஷா பாசு கூறும் போது, “குழந்தை பிறந்த 3 மாதங்களிலேயே அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டுமென்று சொன்னால் எப்படி இருக்கும். என் கணவர் அதற்கு தயாராகவே இல்லை. 

ஆனால், குழந்தையை காப்பாற்ற அதைத் தவிர வேறு வழியில்லை என மருத்துவர்கள் சொன்ன நிலையில், 3 மாதத்தில் இதய அறுவை சிகிச்சையை நடத்தினோம். மருத்துவர்களின் உதவியால் இப்போ என் மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள்” என கூறியுள்ளார்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website