குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும் பெண்களுக்கு சில அறிவுரைகள் இங்கே…!

June 13, 2022 at 2:23 pm
pc

முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் உடல் எடை. பி.எம்.ஐ எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸை கணக்கிடுங்கள். அது 25க்கு மேல் இருந்தால் ஓவர் வெயிட். 30க்கும் மேல் போனால் உடல் பருமன். உங்கள் பி.எம்.ஐ 25ஐத் தொட்டாலே நீங்கள் எச்சரிக்கையடைய வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என சிலபல விஷயங்களால் சரியான எடைக்குத் திரும்ப வேண்டும்.அடுத்து உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகும்.
கருமுட்டை உற்பத்தியும் பாதிக்கும். அப்படியே உற்பத்தியானாலும் முட்டைகளின் தரம் மோசமாக இருக்கும். எனவே, மருத்துவரை சந்தித்து, மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், முட்டைகளின் தரத்தையும் மேம்படுத்தலாம்.
திருமணமாகி கருத்தரிக்காதவர்கள், மாதவிலக்கின் 2வது நாளில் எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் மற்றும் ஏ.எம்.ஹெச் ஆகிய ஹார்மோன்களுக்கான பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஏ.எம்.ஹெச் சோதனையின் மூலம் சினைப்பையில் முட்டைகளின் இருப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தையின்மைக்கான வேறு சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஏ.எம்.ஹெச் குறைவாக இருந்தால் கருமுட்டை வெளிவராது.
அதுவே அதிகமானால் பிசிஓடி பிரச்னைக்கு வழி வகுக்கலாம். எனவே, அதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பிசிஓடி இருப்பது உறுதியானால் அதற்கு ஞிபிணிகிஷி என்கிற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருமுட்டைகளின் தரத்தை மேம்படுத்த முடியும். கருத்தரிக்க நினைக்கிற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தைராய்டு. இந்தப் பிரச்னை இருந்தால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கும்.
சீக்கிரமே கருச்சிதைவு உண்டாகலாம். எனவே ,கருத்தரிக்கும் முன்பே தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளும் கருத்தரிக்கும் முன்பே கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும். இந்த இரண்டும் கட்டுப்பாட்டை மீறிப் போகும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும். கருச்சிதைவு ஏற்படும்.

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
  1. கருத்தரித்தல் என்பது சாதாரணமான நிகழ்வல்ல. நல்ல சந்ததியை சமூகத்துக்கு அளிக்கும் பொறுப்பு அது. அதை நிறைவுடன் செய்ய, தம்பதி இருவரும் தேவையான உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
  2. ”பெண்ணின் உடல் எடையைக் கொண்டு பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டக்ஸை கணக்கிடுங்கள். அது 30-க்கு மேல் இருந்தால் ஒபிஸிட்டி; 25ஐ தொட்டாலே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்ட முயற்சிகளால் சரியான எடைக்குத் திரும்பிய பின், கருவுருதல் நிகழ்ந்தால் நல்லது.
  3. பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகலாம். மாதவிலக்கு சுழற்சி சரியாக இல்லாதவர்கள் மகப்பேறு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று சுழற்சியை சீராக்கிய பின் கருத்தரிக்கலாம்.
  4. தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் கருச்சிதைவு அல்லது குழந்தை பிறந்த பின் அறிவுத்திறன் பாதிக்கப்படலாம். கருத்தரிப்பதற்கு முன் தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக்கொள்ளவும்.
  5. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தாய்க்கு ஏற்படும் விட்டமின் குறைபாடு குழந்தைக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதைப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டு, விட்டமின் குறைபாட்டில் இருந்து வெளிவர வேண்டும்.
  6. ஆண், பெண் இருவரும் ‘உடலளவிலும், மனதளவிலும் நாம் ஃபிட்டாக இருக்கிறோமோ’ என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு கருத்தரிக்க வேண்டும். மனரீதியாக, உடல்ரீதியாக குழந்தையை சுமப்பதற்கான திறனை பெண் பெற்றிருக்க வேண்டும்.
  7. குழந்தை பிறந்த பின் எதிர்கொள்ளவிருக்கும் பொருளாதார செலவினங்களை யோசித்து திட்டமிட வேண்டும்.
  8. உடலளவில் ஆண், பெண் இருவருக்கும் தொற்றுநோய் ஏதேனும் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருப்பின் அது குழந்தையை பாதிக்குமா, எந்த வகையில் பாதிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
  9. பணிக்குச் செல்லும் தாயாக இருந்தால் விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும், எவ்வளவு வாரங்கள், மாதங்கள் குழந்தையுடன் இருக்க முடியும், ஒருவேளை பணிக்குச் செல்ல நேர்ந்தால் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான மாற்று ஏற்பாடு என்ன, அது குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும்.
    திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் போது தாய்மைக்காலம் மட்டுமின்றி வாழ்வு முழுவதும் இனிக்கும்.

குழந்தை வளர்ப்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு புது உயிரை தங்கள் வீட்டுக்கு வரவேற்கும் உற்சாகத்துடனும், பொறுப்புடனும் தம்பதிகள் தயாராகுங்கள்!

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website