கூகுளில் தேடக்கூடாத விடயங்கள்!

November 4, 2023 at 4:21 pm
pc

இன்றைய காலத்தில் இணையதளத்தில் பல விடயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இவ்வாறு நமது தேடுதல் சில தருணங்களில் சிக்கலிலும் மாட்டிக் கொள்கின்றோம். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நிலையில், அனைவரது கையிலும் ஸ்மார்ட் மற்றும் ஐபோன்களும் இருக்கின்றது. இதனால் நமக்கு தேவையான விடயங்களை கூகுள் மூலமாக தேடி தெளிவு படுத்திக் கொள்கிறேன்

இதில் சில சிக்கல்களும் வருகின்றது. ஆம் இதில் பல ஏமாற்றங்களும், மோசடிகளும் அரங்கேறி வருகின்றது. நமது வங்கி பரிவர்த்தனைகளை பெரும்பாலும் செயலி மூலம் பயன்படுத்துவதால், ஸ்கேமர்கள் மக்களின் பணத்தை ஏமாற்றி எடுத்துவிடுகின்றனர்.

நமது தேடலின் போது சில கவர்ச்சியான விளம்பரங்கள் நம்மை திசை திருப்புவதுடன், அதனுள் சென்றால் நமக்கு தெரியாமல் நமது வங்கிப்பணத்தை சைபர் ஹேக்கர்கள் எடுத்துவிடுகின்றனர். ஆதலால் கூகுளில் தேடக்கூடாத விடயங்கள் என்ன என்பதைதெரிந்து கொள்வோம்.

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற தேடலை கூகுளில் தேடக்கூடாதாம். பகுதிநேர வேலை, ரிமோட் வொர்க், அதிக சம்பளம் என்று நமது கண்களை கவரும் இதனை தயவு செய்து நீங்கள் தெரிவு செய்யாதீர்கள். இவை போலியானதாகும்…. இதனுள் சென்றால் நமது வங்கியில் இருக்கும் பணம் பறிபோய்விடும்.

கஸ்டமர் கேர் நம்பரை தேடுவதை தவிர்ககவும். வங்கி, அமேசான், பிளிப்கார்ட், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் கஸ்டமர் கேர் நம்பரை தேடாதீர்கள்… இதனால் நீங்கள் பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படும். தேவையெனில் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.

கிரிப்டோ கரன்சி சார்ந்த விடயங்களை தேடுதல் வேண்டாம். கிரிப்டோ வேலட்களில் 12 முதல் 14 ரேண்டம் என்ற வார்த்தைகளை கொண்ட ‘seed phrase’ இருக்கும். இதனை பயன்படுத்துவதால் மோசடிகளிலிருந்து தப்பிக்கலாம்.

தொழில் நிறுவனங்களின் தொடர்புகள் அல்லது நமது பழைய நண்பர்களை பற்றிய விபரங்களை ஃப்ரீ பீயூப்பிள் ஃபைண்டர்கள் என கூகுளில் தேடினால் பர்ஸிற்கு உலைவைக்கும். ஆனால் இதனை சமூகவலைத்தளங்கள் மூலமாக தேடலாம்.

ஒருவரின் நிதி அந்தஸ்தை தெரிந்து கொள்வதற்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கடன் கொடுக்கும் நிறுவனங்கள் இதனை அறிந்த பின்பே தனது வேலையை தொடங்குகின்றது. ஆதலால் கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்வதற்கு இணையத்தை அனுகி கூகுளில் தேட வேண்டாம். இவ்வாறு தேடலின் போது மோசடி வலையில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் பியூரோ நிறுவனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website