கூகுள் மாபிள் கூட இல்லாத ரகசிய இடங்கள்

October 1, 2023 at 6:42 pm
pc

தற்போதைய காலத்தில் உலகில் எந்த மூலைக்கு செல்ல திட்டமிட்டாலும் எவர் துணையும் இன்றி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடங்களுக்கு துல்லியமாக செல்ல முடியும். ஆனால் கூகுள் மேப்பில் இல்லாத பல ரகசிய இடங்கள் இன்னும் உலகில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டெனோம் அணு மின் நிலையம் – பிரான்ஸ்

உலகில் இருக்கும் மிகப்பெரிய அணு உலைகளுள் 9வது அணு உலையாக கட்டெனோம் அணுமின் நிலையம் உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் லக்சம்பர் நகருக்கு அருகில் கிராண்ட் எஸ்டில் பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது.

இந்த அணு உலையை கூகுள் மேப்பில் பார்க்க முடியாதவாறு முழுப் பகுதியும் பிக்சலேட் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக கூகுள் மேப்பில் இந்ந அணுஉலை பகுதி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

கோஸ் சர்வதேச விமான நிலையம் – கிரீஸ்

கிரீஸ் நாட்டின் கோஸ் தீவில் அமைந்துள்ளது கோஸ் சர்வதேச விமான நிலையம். சுற்றுலாப் பயணிகளின் புகழிடமாக விளங்கும் இந்த விமான நிலையம் கூகுள் மேப்பில் மிகவும் மங்கலாக தெரியும்.

கோடைகாலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் இந்த தீவு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியாக இங்கு பொழுதை கழிப்பதாக கூறப்படுகிறது.

அம்சித்கா தீவு – அலாஸ்கா

அலாஸ்காவில் இருக்கும் அம்சித்கா தீவை பாதிக்குமேல் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது.

1950 களின் பிற்பகுதியில் நிலத்தடி அணு சோதனைக்காக அமெரிக்க அணுச்சக்தி ஆணையத்தால் அம்சித்கா தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அங்கு மூன்று முறை நிலத்தடி அணு சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் அந்த தீவு, கதிரியக்க பொருட்களின் கசிவுக்காக தொடர்ந்து கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.

ஜீனெட் தீவு – ரஷ்யா

கிழக்கு சைபீரியக் கடலில் ஜீனெட் தீவு அமைந்துள்ளது. இது ரஷ்யாவின் ராணுவத் தளமாக கருத்தப்படுவதால், இப்பகுதி கூகுள் மேப்பில் இருந்து முற்றிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

யார் ஒருவரும் இந்த இடத்தை பார்க்க இயலாது. அந்தளவுக்கு ரஷ்யாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடமாக ஜீனெட் தீவு உள்ளது.

மார்கூல் அணு தளம் – பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் மார்க்கூல் அணு தளத்தை கூகுள் மேப்பில் தேடினால் அப்பகுதி முழுவதும் பிக்சலேட்டாக தெரியும்.

பிரான்ஸின் உயர்மட்ட அணு ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக மார்க்கூல் அணு ஆராய்ச்சி மையம் உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த இடத்தை கூகுள் நிறுவனம் பிக்சலேட் செய்து வைத்துள்ளது.

மினாமி டோரிஷிமா விமான நிலையம் – ஜப்பான்

ஜப்பான் நாட்டின் மினாமி டோர்ஷிமா தீவில் அமைந்துள்ள மினாமி டோர்ஷிமா விமான நிலையத்தையும் தெளிவாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது.

அந்நாட்டின் கடற்படையினர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருவதால் அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.

இதனையொட்டி அந்த விமான நிலையம் முழுவதுமாக கூகுள் மேப்பில் பார்க்க முடியாது.

கூகுள் மேப்பில் மேலோட்டமாக டைப் செய்து பார்த்தால், விமான நிலையம் காண்பிக்கப்படும் என்றாலும், அப்பகுதியின் முக்கிய தகவல்கள் இருக்காது.

மொரோவா தீவு – பிரெஞ்சு பாலினீசியா

மொரோவா தீவு, பிரான்ஸில் அமைந்துள்ளது. அப்பகுதியில் 1966 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அணுச்சக்தி சோதனைகள் நடைபெற்றதால் அப்பகுதி கூகுள் மேப்பில் மங்கலாக மட்டுமே தெரியும். தெளிவாக இருக்காது. அந்த தீவை சுற்றிப் பார்க்க பார்வையாளர்களுக்கு இன்றளவும் அனுமதி இல்லை.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website