கூந்தலின் வளர்ச்சி மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கும் மருதாணியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் …!!

November 12, 2022 at 5:29 pm
pc

மங்களகரமான விஷயங்களில் பயன்படுத்தப்படும் மருதாணி அழகு பராமரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. நரை முடி கொண்டவர்கள் தங்களது கூந்தலுக்கு மருதாணியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது கூந்தலுக்கு கருப்பு நிறத்தை அளிப்பதோடு கூந்தலின் வளர்ச்சி மற்றும் பளபளப்பான தோற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருதாணியின் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

இராசயனங்கள் நிறைந்த தயாரிப்புகளை தவிர்த்து இப்போது பலர் மருதாணி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இரசாயண கலப்படத்திற்கு பதிலாக அமேசானில் வளரும் மூலிகைகள் மற்றும் ஆயுர்வேதம் நிரம்பிய மூலிகைகள் கொண்டு சாயங்கள் வந்துள்ளன.

இடையில் மருதாணிக்கு மாற்றாக இரசாயணம் கலந்த ஹேர்-டை பரவலாக பயன்படுத்தப்பட்டது. இவை விரைவில் பலனளிக்கும் என்பதால் பலரும் இதை விரும்பினார்கள். கருப்பு, பழுப்பு தாமிரம், பொன்னிறம் போன்ற நிறங்களில் பயன்படுத்த தொடங்கினார்கள். எனினும் காலப்போக்கில் இதன் பக்கவிளைவுகளை அறிந்து ரசாயனம் நிறைந்த முடி சாயங்களை தவிர்த்தனர்.

இதில் கலக்கப்படும் அமோனியா, எத்தலோனமைன், டைத்தலோனமைன் மற்றும் ட்ரைத்தலோனமைன் போன்றவை உள்ளது. இந்த இரசாயனங்கள் உச்சந்தலையில் ஒவ்வாமை, உலர் முடி மற்றும் உடைதல் ஆகியவற்றை உண்டாக்குகிறது. இது புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வு பரவலாக அதிகரித்தது.

​வீட்டிலேயே மருதாணி பயன்பாடு

எல்லா தரப்பு மக்களாலும் மருதாணியை வீட்டிலேயே எளிதாக பயன்படுத்தலாம். மருதாணி இலையை எடுத்து உலர வைத்து பொடித்து சலித்து பயன்படுத்தலாம். இயற்கையாக பயன்படுத்த விரும்புபவர்கள் இப்படி செய்யலாம். இயலாதவர்களுக்கு கடையில் பிரீமியம் ஹென்னா க்ரீம் கிடைக்கிறது.

இயற்கையான மருதாணியை பயன்படுத்துபவதன் மூலம் உச்சந்தலையில் இயற்கையான பொருட்கள் உள்ளே செல்கிறது மேலும் இராசயனங்கள் இல்லை. அதனோடு மாதுளை தோல்கள், அவுரி பொடி, பீட்ரூட் போன்ற இயற்கையான பொருட்களை சேர்ப்பதன் மூலம் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக அடர் கருப்பு நிற கூந்தலை பெறலாம். இது நரைத்த முடியை மறைப்பது மட்டுமல்லாமல் கூந்தல் நரைப்பதையும் தடுக்கிறது.

​மருதாணி முடிக்கு கண்டிஷனர்

இது ஒரு இயற்கையான கண்டிஷனரும் கூட. கூந்தல் மென்மையாவதற்கு தேவையான வைட்டமின் – இ மற்றும் டானின் ஆகியவற்றை இயற்கையாக வழங்குகிறது. மருதாணி தடவிய ஒரு நாளுக்கு பொன் எண்ணெய் தடவினால் கூந்தல் இயற்கையாகவே மென்மையாக உதவும். சூடான எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் மருதாணியின் நிறம் நீண்ட நாட்களுக்கு வரும்.

​முடியை வலுப்படுத்த மருதாணி

மருதாணி உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதால் வேர்கள் வலிமையாகின்றன. இது உச்சந்தலையின் பிஹெச்ஐ சமநிலைபடுத்துகிறது. கூந்தலில் எண்ணெய் படலத்தை உற்பத்தி செய்யும் செபாசியஸ் சுரப்பிகள் அமைதியாக இருக்கும். எண்ணெய் பசை நிறைந்த உச்சந்தலையில் எண்ணெயின் அளவு கட்டுப்படுத்தபடுகிறது.

​முடியின் எண்ணெய் தன்மை போக மருதாணி

ஒருவேளை பிரச்னை தொடர்ந்து கொண்டே இருந்தால் மருதாணியுடன் முல்தானி மிட்டியை கலந்து 3- 4 மணி நேரம் ஊறவைப்பதால் எண்ணெய் பிசுபிசுப்பு குறையும். பிரச்னைகளும் நீங்கிவிடும்.

மருதாணியில் புரோட்டீன் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் அதிகம் காணப்படும். இது உச்சந்தலையில் உள்ள வேர்களுக்கு வலிமையை கொடுக்கும். இது முடி உதிர்வை குறைக்கும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு திறன் உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலை அடக்குகிறது, அரிப்பை குறைக்கவும் செய்கிறது. பொடுகையும் இது தடுக்கும்.

கூந்தல் மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த தீர்வாக மருதாணி இருக்கும். இதனுடன் சரியான பொருட்களை கலந்து பயன்படுத்தினால் அற்புதமான பலன்களை பெறலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website