கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை: பரபரப்பான நிலையில் ரஜினிகாந்த் சொன்னது என்ன?

கேரளா ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விடயங்கள் நடந்துள்ளன. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள வன்புணர்வு கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்டோர் விளக்கம் அளித்துள்ளனர். செய்தித்தாள்கள், ஊடகம் ஆகியவற்றிலும் இதுபற்றி பேசப்பட்டு வருகிறது.
மேலும், இந்த வன்புணர்வு கொடுமைகள் கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் நடைபெற்றுள்ளது என்று தமிழ் நடிகைகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், கேரளா சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வன்புணர்வு விவகாரம் தொடர்பாகவும், ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாகவும் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சாரி. நடிகர் சூர்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய படம் நன்றாக ஓட வேண்டும்.
சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு வாழ்த்துகள். அதனை பார்க்க செல்வதற்கு நேரம் இல்லை” என்று தெரிவித்தார்.