கை விரல் கருமை போக்க சூப்பரான டிப்ஸ் …!!

October 8, 2022 at 5:46 pm
pc
டிப்ஸ் -1

1 டீஸ்பூன் மில்க் க்ரீம்,

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய்

ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

டிப்ஸ் 2

1/2 டீஸ்பூன் ஜொஜோபா ஆயில்,

1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய்,

1/2 டீஸ்பூன் ரோஸ்மேரி ஆயில்

மற்றும் 2-3 துளி எலுமிச்சை சாறு

ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கை விரல் நகங்கள் மற்றும் கைவிரல் மூட்டுக்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் இக்கலவையைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website