கொசுவை விரட்டியடிக்கும் அற்புத செடிகள்!
கடுகு சிறிதானாலும் காரம் பெரியது என்று கூறுவார்கள். அந்த வகையில் கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
கொசுக்களிடம் இருந்து தப்பிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் சில நேரங்களில் அவற்றை தடுக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில செடிகளை வீட்டிலும் சுற்றுப்புபறச் சூழலிலும் வளர்ப்பதால் கொசுக்களிடமிருந்து தப்பிக்கலாம்.
சாமந்திப் பூ
சாமந்திப் பூக்களில் காணப்படும் லிமோனின் என்ற சேர்மம் பூச்சி விரட்டியாக செயல்படுகின்றது.
லாவண்டர்
இதை ஃப்ரஷ்ஷாகவோ அல்லது காய்ந்த வடிவிலோ, எண்ணெய் வடிவிலோ கொசுக்கள் அல்லது பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம்.
பூனைக் கீரை
இதில் காணப்படும் நெப்பிட்டா கட்டரியா என்ற கலவையானது, கொசுக்களை விரட்டுவதற்கு பயன்படுகிறது.
லெமன் க்ராஸ்
இதில் சிட்ரோனெல்லா எனப்படும் வலிமையான வானை உள்ளது. இது கொசுக்கள் மட்டுமின்றி எலிகளையும் விரட்டக்கூடியது.
ரோஸ்மேரி
இதுவொரு சிறந்த கொசு விரட்டி. இது வீட்டை பூச்சிகள் இல்லாமல் பாதுகாக்க உதவும்.