கொன்னுடுவேன்னு மிரட்டுறா.. 4வது திருமணம் செய்யும் நடிகர் 3வது மனைவி மீது பரபர புகார்!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் கவுரவம், அயோக்கியா, வீட்டுல விஷேசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை பவித்ரா லோகேஷ். சினிமா மற்றும் சீரியல்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் பவித்ரா லோகேஷ், ஏற்கனே திருமணமாகி விவாகரத்தானவர் என கூறப்படுகிறது.
ஹோட்டலில் ஸ்டே…
இந்நிலையில் தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் அண்ணனுமான நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வருகிறது. நரேஷ் பாபு ஏற்கனவே மூன்று திருமணம் செய்தவர். சமீபத்தில் மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் ஒன்றாக தங்கியிருந்தனர். இதனை அறிந்த நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவியான ரம்யா ஹோட்டலுக்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.
உதட்டோடு உதடு முத்தம்
ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நரேஷ் பாபு விசில் அடித்தும் நடனமாடியும் தனது மூன்றாவது மனைவியை கிண்டல் செய்தப்படியே ஹோட்டல் அறையில் இருந்து பவித்ரா லோகேஷுடன் வெளியேறினார். இந்நிலையில் பவித்ராவும் நரேஷ் பாபுவும் ஒன்றாக புத்தாண்டு கொண்டாடினர். அப்போது பவித்ராவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து விரைவில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து வீடியோ வெளியிட்டார் நரேஷ் பாபு.
பரபரப்பு குற்றச்சாட்டு
இதனால் கடுப்பான நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி, விவாகரத்து கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் நரேஷ் பாபுவும் நடிகை பவித்ராவும் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது மனைவியான ரம்யா தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் நரேஷ் பாபு. அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் நரேஷ் பாபு இந்த பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.