கோடிகளில் குவிந்த வசூல்!! தங்கலான் வசூல் கணிப்பு!

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், டேனியல், பார்வதி, பசுபதி, ஹரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் விடுமுறை தினமான சுதந்திர தினத்தை குறி வைத்து ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாளே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன்.
பா. ரஞ்சித் இந்த படத்தில் சியான் விக்ரமிடம் மட்டுமின்றி அனைத்து நடிகர்களிடமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் வாங்கியிருக்கும் உழைப்பு நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது உறுதி.
ஜி.வி. பிரகாஷ் இசையில் இடம்பெற்ற ‘மினிக்கி மினிக்கி’ மற்றும் ‘தங்கலானே’ பாடல்கள் படத்தின் பின்னணி இசை என அனைத்துமே தங்கலான் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியானுக்கு ரசிகர்கள் இல்லையா?: அஜித், விஜய், சூர்யா அளவுக்கு சியான் விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லை என்கிற விமர்சனத்தை பத்திரிகையாளர் ஒருவர் வைத்ததில் இருந்தே தங்கலான் படத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பறக்க ஆரம்பித்துள்ளது. விஜய், அஜித், சூர்யா ரசிகர்களும் சியான் விக்ரம் படம் நல்லா இருந்தால் முதல் ஆளாக தியேட்டருக்கு சென்று பார்த்து படத்தை சப்போர்ட் செய்வார்கள் என்றும் சியான் விக்ரமின் ரசிகர்கள் இந்த படத்தை வேறலெவலில் விக்ரமின் நடிப்புக்காகவே கொண்டாடுவார்கள் என்பது முதல் நாளிலேயே தெளிவாக தெரிகிறது.
முதல் நாள் வசூல் கணிப்பு: அரசியல் கருத்தையும், அமானுஷ்ய கதையையும் கலந்துக் கட்டி தங்க புதையல் வேட்டை படமாக கோலார் தங்க வயலில் தங்கத்தை எடுத்தக் கதையை பா. ரஞ்சித் கொடுத்துள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் 10 கோடி ரூபாய் வசூலை முதல் நாளில் படம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வசூலும், இந்தியளவில் 12 முதல் 14 கோடி ரூபாய் வசூல் முதல் நாளில் வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.
200 கோடி தாண்டுமா?: ஆனால், சியான் விக்ரம் போட்டுள்ள உழைப்புக்கு இந்த படம் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்றும் அதை விட அதிகமாக 200 கோடி ரூபாய் வசூலையாவது இந்த படம் வசூல் ஈட்ட வேண்டும் என ரசிகர்கள் மக்களை படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். எந்தளவுக்கு வசூல் வேட்டையை தங்கலான் ஆடுகிறான் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.