கோடிகளில் புரளும் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

August 23, 2023 at 6:23 am
pc

தமிழ் திரையுலகில் கேடி படம் மூலம் அறிமுகமாகி விஜய், அஜித், தனுஷ், கார்த்திக், சூர்யா என பல பிரபலங்களுடன் தமன்னா நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

தற்போது வெளிவந்த ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் காவாலா பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.

16 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் அசத்தி வரும் தமன்னா, ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமன்னாவின் சொத்து மதிப்பு 120 கோடிக்கு மேல் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டிற்கு ரூபாய் 12 கோடி வரை வருவாய் ஈட்டும் அவர் மும்பையில் 16 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் எனவும், சொந்தமாக நகை கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website