கோடையில் குளு குளுனு இருக்க ஆரோக்கியமான நுங்கு பால் பாயசம் சமைச்சி எல்லாரையும் அசத்துங்க ….!!

May 28, 2022 at 1:53 pm
pc
தேவையான பொருட்கள்:

நுங்கு – 2,
தேங்காய்ப் பால் – 250 மி.லி.,
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்

செய்முறை:

அரை மூடி தேங்காயைத் துருவி, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அத்துடன் 250 மி.லி. தண்ணீர் சேர்க்கவும். பிறகு வடிகட்டியால் பாலை வடிகட்டவும்.
தேங்காய்ப் பாலுடன் ஏலக்காய்த் தூள், பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இரண்டு டீஸ்பூன் நறுக்கிய நுங்கைச் சேர்த்துப் பரிமாறவும்.
வயிற்றிலும் வாயிலும் உள்ள புண்ணை ஆற்றும்.
இது வித்தியாசமான , அலாதி சுவையுடைய பானம். இளம் நுங்காக இருந்தால் சுவை கூடும். குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்து, பின் அருந்தவும்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website