கோட் படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.


தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் இலங்கை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் அதற்கு பதிலாக வேறொரு நாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ’கோட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் ரஷ்யாவில் லொகேஷன் பார்க்கும் பணியை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களே எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.