கோதுமை விலையேற்றத்தால் திண்டாடும் இந்திய மக்கள்!

May 10, 2022 at 7:03 am
pc

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் கடந்த 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கோதுமையின் விலை பயங்கர ஏற்றத்தை கண்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையிலான போர் நடவடிக்கை காரணமாக உலக நாடுகளின் கோதுமை தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வரலாறு காணாத அளவு இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைகள் மற்றும் கொரோனா காலத்தில் அரசு அறிவித்த கோதுமை நிவாரணம் ஆகிய காரணங்களால் இந்தியாவின் கோதுமையின் உற்பத்தி மற்றும் கையிருப்பு ஆகியவை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

உலகில் இரண்டாவது மற்றும் நான்காவது கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் 75 நாளாக நடைப்பெற்று வருவதால் உலக நாடுகளுக்கு கடுமையான கோதுமை இறக்குமதி தட்டுபாடு எற்பட்டுள்ளது.

இதனால் கோதுமை உற்பத்தியில் சீனாவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கு உலக நாடுகளுக்கு கோதுமையை எற்றுமதி செய்யும் கட்டாயம் எற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோதுமையின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் கிலோ கோதுமை 32.38 என்ற விலையை தொட்டுள்ளது, இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றமாகும்.

கோதுமையின் இந்த விலையேற்றம் கடந்த ஒருவருடத்தில் மட்டும் 9.15 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாகவும், சனிக்கிழமை நிலவரப்படி அதிகபட்டமாக Port Blair பகுதியில் கிலோ கோதுமை 59 ரூபாயாகவும் குறைந்தபட்சமாக மேற்வங்கத்தில் உள்ள Purulia-வில் கிலோ கோதுமை 22 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

இந்த விலையேற்றமானது இந்திய ரிசர்வ் வங்கி கணித்ததை விடவும் அதிகம் எனவும், உலக அளவில் கோதுமையின் விலையேற்றம் 14 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு உயர்ந்து இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் அதிகரித்து வரும் ஏரிபொருள் தட்டுபாடும், எரிபொருள் விலையேற்றமும் கோதுமை மற்றும் கோதுமை பொருள்களான பாண் ஆகியவற்றின் விலையை மறைமுகமாக உயர்த்துயுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website