கோலிக்கு லிப் லாக் கொடுத்த ரசிகை…!அதிர்ச்சியில் நெட்டிசன்கள்…

February 21, 2023 at 6:25 pm
pc

விளையாட்டு, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகள் புரியும் பிரபலங்களுக்கு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்படுகிறது. அந்த வகையில், ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் சிலைக்கு பெண் ஒருவர் முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்பது வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள், அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகின்றனர். அனுஷ்கா ஷர்மாவின் எதிர்வினை குறித்து சிலர் கவலைப்பட்டதாகவும் தெரிகிறது. அவர் கிரிக்கெட் வீரரின் ரசிகை என தெரிகிறது. அவள் மெழுகு சிலையுடன் போஸ் கொடுத்தபடி சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இது குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்தை தெரிவித்து வருகின்றனர். அனுஷ்கா பாபி இந்த வீடியோவைப் பார்த்தால் அந்தப் பெண்ணின் உதடுகளைப் பிளந்துவிடுவார் என்று இந்தியில் ஒரு பயனர் கூறி உள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website