சப்பாத்திக்கு சூப்பரான பகரா பேங்கன் செய்வது எப்படி ..!!

January 27, 2023 at 6:54 am
pc
தேவையான பொருட்கள் :

கத்திரிக்காய் – கால் கிலோ,
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்,
புளி – எலுமிச்சை அளவு,
வெங்காயம் – 100 கிராம்,
தனியா – 3 டீஸ்பூன்,
எள், சீரகம் – தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப,
வேர்க்கடலை – 3 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
பூண்டு – 5 பல்,
எண்ணெய், சீரகம் – தாளிக்க தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை :
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
  • கத்தரிக்காயை காம்பை நீக்கி துண்டுளாக வெட்டி வைக்கவும்.
  • கடாயில் தனியா, எள், வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்…
  • தேங்காய் துருவல் சேர்த்து மேலும் வதக்கவும்.
  • வதக்கிய அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு, பச்சை வாசனை போனவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும்.
  • பிறகு புளிக்கரைசல், அரைத்த விழுது, அரைத்த மசாலா பொடி, சேர்த்து வதக்கவும்.
  • மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்காயுடன் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
  • சூப்பரான பகரா பேங்கன் ரெடி.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website