சமந்தா போல நடிகை நந்திதாவுக்கு வந்த அரிய நோய்!

July 21, 2023 at 5:28 pm
pc

நடிகை நந்திதா அட்டகத்தி படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதன் பிறகு எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் அவர் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் Hidimbha என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

சமீபத்தில் நந்திதா அளித்த பேட்டியில் தான் கடந்த சில வருடங்களாக fibromyalgia என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நோயால் உடை எடையில் அதிகம் மாறுபாடு வந்தது என்றும், சின்ன வேலை செய்தாலும் உடலில் அதிகம் வலி இருக்கும், சில நாட்களில் உடலை அசைப்பதே கஷ்டமாக இருக்கும் நிலை வந்தது என்று கூறி இருக்கிறார்.

நடிகை சமந்தா போல தற்போது நந்திதாவும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website