சமீரா ரெட்டிக்கு அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த பிரபலம் – பயந்து நடுங்கவைத்த நடிகை!

July 23, 2023 at 10:29 pm
pc

சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மும்பையில் வளர்ந்த பெண். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் நுழைந்தார். பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் சூர்யா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது நடிப்பால் பல ரசிகர் மனதில் இடம்பிடித்தார். இதனை தொடர்ந்து அசல், வெடி, வேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். 

அட்ஜஸ்ட்மென்ட்

இந்நிலையில், இவர் 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவரது கணவர் நடிப்பதற்கு அனுமதித்தாலும் இவர் சினிமா வாழ்க்கையை விட்டு விலகினார். தற்பொழுது இவருக்கு வந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை குறித்து செய்யாறு பாலு தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில் “மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜெட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள், யார் டார்ச்சர் கொடுத்தது என அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பாலிவுட் மற்றும் கோலிவுட்டை கலங்கடித்தார். 

சில பிரபலங்கள் சமீரா ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்று கெஞ்சும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக நடிகை சமீரா ரெட்டி நடந்து கொண்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website