சமூக வலைதளத்தில் சல்மான் கான் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட முன்னாள் காதலி…

August 20, 2022 at 7:29 pm
pc

சமூக வலைதளத்தில் சல்மான் கான் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட முன்னாள் காதலி 

சல்மான் கானின் தீவிர ரசிகையான சோமி அலி பல ஆண்டுகள் அவரை காதலித்து வந்தார் 

பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் பெண்களை அடித்து துன்புறுத்துபவர் என நடிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் சல்மான் கான். இவரது சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் Kabhi Eid Kabhi Diwali படத்தை எதிர்பார்த்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்தி நடிகை சோமி அலி பரபரப்பு குற்றச்சாட்டை சல்மான் கான் மீது வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

‘அவர் பெண்களை அடிப்பவர், என்னை மட்டும் அல்ல பலரையும். அவரை வணங்குவதை தயவு செய்து நிறுத்துங்கள். அவர் கொடூரமான மனநோயாளி’ என தெரிவித்தார். சல்மான் கானின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் நடித்த மெயின் பியார் கியா படத்தின் போஸ்டரை அதனுடன் இணைத்து பதிவிட்டிருந்தார்.

சோமி அலியின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத் தொடர்ந்து அவர் அதனை நீக்கி விட்டார். 1993ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை சல்மான் கானை காதலித்து வந்த சோமி அலி, அவருடன் பல இடங்களில் சுற்றியுள்ளார்.

இந்தியில் சில படங்களிலேயே நடித்த சோமி அலி, தனது படிப்பை தொடரை அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தான் அவரது பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website