சமையலுக்கு பயன்படும் உணவுப்பொருட்களை மருந்துகளாக பயன்படுத்திக்கொள்வது எப்படி…???

June 28, 2022 at 3:13 pm
pc

சிரமம் பார்க்காமல் வரலி_ஞ்சளாக வாங்கி மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். எந்த உணவு சமைத்தாலும், காய், சாம்பார், கேசரி என்று எல்லாவற்றிலும் ஒரு சிட்டிகை போடவும். கேன்சர் வராது. கிருமி நாசினி. தண்ணீரில் கரைத்து வீட்டினுள் தெளித்து விடவும், மீதி நீரை குளிக்கப் பயன்படுத்தவும்.

வெந்தயம்:

பொடியாகவும் பயன்படுத்தவும். காங்கை அதிகமுள்ள உடம்புக்கு நல்ல குளிர்ச்சி. பெண்கள் வயிற்று வலிக்கு அரு மருந்து.
இரவு 10 வெந்தயத்தை ஒரு செம்பு பாத்திர நீரில், காலையில் எழுந்து, பல் தேய்த்து விட்டு அந்த நீரை தினமும் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

கருஞ்சீரகம்:

தொடர்ந்து நீரோடு சாப்பிட்டு வர முகப்பொலிவு ஏற்படும், முகம் பளிச்னு
ஆகி விடும்.

இஞ்சி/சுக்கு:


மஞ்சள் சேர்ப்பது போல தினமும் ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி சேர்த்து வர, பித்த நாடி கட்டுக்குள் இருக்கும். ஆசைகள் நம்மை அலைக்கழிக்காது.
தேனீர் தயாரிக்க சுக்கு, இஞ்சி இரண்டில் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை
சுப்ரமணிய சுவாமிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!

மிளகு:

வாஸ்கோட காமாவை போர்ட்ச்சுகளில் இருந்து 1498 வருடம் கேரளத்துக்கு வரவழைத்த வஸ்து. நெஞ்சின் கபத்தை கட்டுக்குள் வைக்கும். பொங்கலில் போட்டு சாப்பிட்டால் மதிய நேரம் ஆபிஸில் தூக்கம் வராது என்பது ஆன்றோர் வாக்கு. மூளை (இருந்தால்) வேலை செய்யும். சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்.

கிராம்பு:


பற்கூச்சம் போக்க ஒரு கிராம்பை பல்லிடுக்கில் வைத்து கடித்து கொள்ளுங்கள்.

ஏலக்காய்/பச்சைகற்பூரம்:

இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வாய் துர்நாற்றம் போக்கும்.
சர்க்கரை பொங்கலில் கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் பொடித்து போட்டால் சுவை கூடும். ஐயங்கார் மக்கள்,அக்கார அடிசில் என்று ஒரு பதார்த்தம் செய்தே பெருமாளை வசியப்படுத்தி வைத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website