சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா?வேண்டாமா?

February 28, 2023 at 1:55 pm
pc

கோடை காலம் வந்துவிட்டாலே இளநீர் அமிர்தமாகவே காணப்படும். ஆம் அந்த அளவிற்கு உடம்பை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இளநீர் பானங்கள் பயன்படுகின்றது. இளநீரில் அதிகளவு வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இளநீரானது ஊட்டச்சத்துக்களுடன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.

இளநீர் புத்துணர்ச்சியையும், போதுமான ஆற்றலை வழங்குவதுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக அருந்தலாம். இளநீர் குடித்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த உதவியாக இருக்கின்றது.

ஆனால் இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இருப்பதால் நீங்கள் இளநீரை அதிகளவு குடிக்காமல் அளவோடு குடிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

கோடை காலத்தில் வேறு பானங்களை அருந்தாமல் இளநீர் அருந்துவது நல்லதாகும்.

சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதிலும் பெரிதும் உதவியாக இருக்கிறது, ஒருவர் தினசரி இளநீரை குடித்து வர அவர்களது சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் அருமருந்தாக பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு இளநீரை கொடுத்தால் அவர்களது சிறுநீரில் கற்கள் உருவாக காரணமாக இருக்கும் அதிக சிட்ரேட், பொட்டாசியம் மற்றும் குளோரைடுகள் வெளியேற்றுகிறது.

எனவே இளநீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும் என்பது தெரிகிறது.

இளநீர் குடிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பான பங்கினை வகிக்கிறது. இளநீரில் நிறைந்துள்ள உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றது.

அடிக்கடி இளநீர் குடித்து வர இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது என்று ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும் சருமம் பொலிவடைவதுடன், இயற்கையான மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website