சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்கும் வேப்பிலை கற்றாழை ஜூஸ் ரெசிபி..!!

நீரிழிவு நோய்க்கு சிகிச்சைகளுடன் மூலிகைகளும் உதவும் வாழ்நாள் நோயான நீரிழிவு நோய்க்கு ஆயுள் முழுவதும் மருந்துகள் தேவை. உணவு முறை, வாழ்க்கை முறை, உடல் பயிற்சி போன்ற மூன்றும் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உணவு முறையில் மூலிகைகளும் உதவும் . இதை பல ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. அந்த வகையில் வேப்பிலை மற்றும் கற்றாழை இரண்டும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும். அதை எப்படி எடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
உலகளவில் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயது பேதமில்லாமல் சிறுவயதினர் முதல் முதியவர் வரை அனைவரையும் பாதிக்கும் இந்த நோய்க்கு நிரந்தர சிகிச்சை இல்லை. ஆனால் இதை எப்போதும் கட்டுக்குள் வைக்க பல பராமரிப்புகள் செய்ய வேண்டும். தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இல்லையெனில் நீரிழிவு நோய் பாதிப்புகள் அதிகரித்து உடல் உள் உறுப்புகளை பாதிக்க செய்துவிடும். நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் சில மூலிகைகளை எடுத்து வருவதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கலாம். உங்களுக்கு நீரிழிவு இருந்தால் இந்த சோற்றுக்கற்றாழை வேப்பிலை சேர்த்த பானம் எடுக்கலாம். எப்படி தயாரிப்பது அதன் நன்மைகள் என்ன என்பதை உணர்த்தலாம்.
தேவையானவை :
வேப்ப இலைகள் – 5-6
கற்றாழை சாறு – 1 டீஸ்பூன்
தண்ணீர்- ஒன்றரை கப்
செய்முறை :
வேப்ப இலைகளை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். கற்றாழை மடல்களை எடுத்து உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதிகளை எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி எடுக்கவும்.
பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுடன் வேப்பிலைகளை சேர்க்கவும். பிறகு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி அதில் கற்றாழை சாறு சேர்த்து கலந்து குடிக்கவும். தேவையெனில் சிட்டிகை உப்பு கலந்து கொள்ளலாம்.
இதை வாரத்தில் மூன்று நாட்கள் வரை எடுக்கலாம். உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க இவை உதவும் என்றாலும் உங்களுக்கு நீரிழிவு கட்டுக்குள் இருந்தால் இவை உடலில் இரத்த சர்க்கரை அளவை திடீரென்று குறைத்து விடலாம். அதனால் மருத்துவரின் அறிவுரையுடன் எடுக்க வேண்டும். அதோடு இதை தொடர்ந்து எடுத்தால் அவ்வபோது சர்க்கரை அளவை பரிசோதிப்பது பாதுகாப்பானது.
நீரிழிவுக்கு வேப்பிலை நன்மைகள் :
வேப்பிலையில் ஃப்ளவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள், வைரஸ் எதிர்ப்பு மற்றூம் அழற்சி எதிர்ப்பு கலவைகள் நிறைந்துள்ளன. இவை எளிதாக எல்லா இடங்களிலும் வளரும் மரம். இது உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
Ethno-Medicine என்னும் இதழின் படி ஆய்வு ஒன்றில் வேப்பிலைகள் இன்சுலின் அல்லாத நீரிழிவு நோயாளிகளின் நீரிழிவு அறிகுறிகளை கட்டுப்படுத்த வேப்ப இலை பொடி உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
வேப்பிலை கிருமி நாசினிகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகளுடன் உள்ளன. இதன் இலைகள், பூக்கள் விதைகள், பழங்கள், கொட்டைகள், மரப்பட்டைகள் என எல்லாமே பாரம்பரியமாக சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இது வீக்கம், தொற்று, காய்ச்சல், தோல் நோய்கள் அல்லது பல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு கட்டுப்படுத்த உதவும் என்று கூறுகின்றன.
நீரிழிவுக்கு சோற்றுக்கற்றாழை நன்மைகள் :
நீரிழிவு நோயை நிர்வகிக்க கற்றாழை உதவும். பாரம்பரிய மற்றும் நிரப்பு மருத்துவம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் கற்றாழை ஜெல் உட்கொள்வது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிசொயோதெரபி ரிசர்ச் இதழின் மற்றொரு ஆய்வு, கற்றாழை இலைகளின் கூழ், இன்சுலின் அல்லாத நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று காட்டுகிறது.
கற்றாழையில் உள்ள 75 செயலில் உள்ள நம்பகமான மூலங்கள் உள்ளது. வைட்டமின்கள் கனிமங்கள், நொதிகள், அமினோ அமிலங்கள் உள்ளனன்.
எனினும் இது குறித்து கூடுதலான ஆராய்ச்சிகள் தேவை. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க கற்றாழை திறன் குறித்து இன்னும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நீங்கள் நீரிழிவை கட்டுக்குள் வைக்க இந்த மூலிகைகள் எடுப்பதாக இருந்தால் மருத்துவ நிபுணரின் ஆலோசனை அவசியம்.