சர்ச்சையில் சிக்கிய பா. ரஞ்சித்!

February 5, 2023 at 7:15 am
pc

அட்ட கத்தி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா. ரஞ்சித் அதன்பின் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களின் மூலம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேசி பல சர்ச்சைகளை கிளப்பினார்.

இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் வெளியாக உள்ள பொம்மை நாயகி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா. ரஞ்சித் பெரிய இடத்தை கடுமையாக விமர்சித்து வான்டட் ஆக தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் பா. ரஞ்சித் பிரபல ஓடிடி நிறுவனங்களை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார்.

வருடத்திற்கு 20 படங்கள் வரை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களை தான் வாங்குகிறது. இவர்கள் ஒரு படம் கூட சிறிய பட்ஜெட் படங்களை வாங்கிய சரித்திரம் இல்லை. மேலும் ஹாட் ஸ்டார் உள்ளிட்ட மற்ற ஓடிடி-கள் கம்மி பட்ஜெட் படங்களை வாங்குவதிலும் பார்ப்பதிலும் இங்கு வெளிப்பட தன்மை சுத்தமாகவே இல்லை.

பெரிய இயக்குனர்கள் அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி ஓடிடி நிறுவனத்தை எளிதாக அணுகி படத்தை விற்று விடுகின்றனர். ஆனால் இளம் இயக்குனர்கள் ஒரு படத்தை எடுத்து ஓடிடி தளத்திற்கு விற்பதில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதை விட தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் ஏகப்பட்ட பிரச்சனை எழுகிறது. குறைந்தது 80 லட்சம் செலவு செய்தால் தான் ஒரு படத்தை மக்களிடம் விளம்பரப்படுத்தி தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிகிறது.

அப்படி இல்லை என்றால் திரையரங்குகளும் கிடைக்காது. ஸ்கிரீனிங்ஸ் கிடைக்காது. அப்படியே ரிலீஸ் செய்தாலும் மக்கள் படம் பார்க்காத தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யும் அவலமும் ஏற்படுகிறது. இப்படி படத்தை ரிலீஸ் செய்வதற்கு கொஞ்ச நஞ்சமல்ல ஏகப்பட்ட போராட்டங்களை சந்திக்க வேண்டியது உள்ளது.

மேலும் ஓடிடி-யில் விற்றால்தான் தயாரிப்பாளர்கள் போட்ட கொஞ்ச காசையாவது எடுக்க முடியும். ஆனால் அதுவும் பெரிய ப்ராசஸ் ஆக உள்ளது. ஒரு படத்தை முழுவதுமாக எடுத்து முடித்து 6 மாதம் வரை காத்திருக்கின்றோம். மேலும் ஓடிடி நிறுவனத்திற்கு தான் முதலில் படத்தை போட்டு காண்பிப்போம். அவர்களது விமர்சனம் நெகட்டிவ் ஆக இருந்தால் நிச்சயம் மற்ற ஓடிடி நிறுவனங்களுக்கு எளிதாக கசிந்து விடுகிறது. இதனால் படத்தை விநியோகம் செய்ய முடியாமலே நிறைய படங்கள் ஒன்னும் இல்லாமல் போனது.

இந்த சூழ்நிலை எல்லாம் மாற வேண்டும். முன்பு திரையரங்கு தான் ஜனநாயக பூர்வமான இடமாக இருந்தது. இதை ஆழமாக நம்புகிறேன். அந்த நிலைமை மறுபடியும் வரவேண்டும் என்று பா. ரஞ்சித் இளம் இயக்குனர்களுக்கு சாதகமாக பேச வேண்டும் என பிரபல ஓடிடி நிறுவனங்களின் பெயர்களை பட்டியலிட்டு கிழித்து தொங்க விட்டது தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்புகிறது. ஆனால் பா. ரஞ்சித் இயக்கியிருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website