சர்ச்சை கேள்விக்கு சூர்யா கொடுத்த விளக்கம்!

August 15, 2023 at 12:37 pm
pc

நடிகர் சூர்யா அவரது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் என்றும், அங்கு சொந்தமாக ஒரு வீட்டை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார் என்றும் செய்தி கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது. சூர்யா மும்பைக்கு விமானத்தில் சென்று வரும் ஏர்போர்ட் வீடியோக்களும் அடிக்கடி வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது தான் மும்பையில் செட்டில் ஆகவில்லை என்றும், தனது மகன் மற்றும் மகள் ஆகியோர் படிப்பிற்காக அங்கே இருக்கிறார்கள் அவ்வளவுதான் என கூறி இருக்கிறார்.

தற்போது வாழ்க்கையில் எதாவது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பதாகவும், அவரது நண்பர் நடிகர் மாதவன் உடன் தற்போது கோல்ப் விழையாட்டை கற்றுக்கொண்டு விளையாடி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website