சானிட்டரி நாப்கின்களில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா …?என்னென்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க …!!

October 24, 2022 at 2:44 pm
pc

எல்லா பெண்களுக்கும் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி காலம் என்பது வலிமிக்க மற்றும் அசௌகரியமான காலமாகும். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது வழக்கும். அந்தவகையில், இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். மரக்கூழ், பிளாஸ்டிக், பாலிஎத்திலீன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

அதிலும் குறிப்பாக அதிக ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதால் Super Absorbent Polymers எனப்படும் ரசாயனமும், டயாக்சின், பெட்ரோகெமிக்கல்ஸ் மற்றும் வாசனை திரவம் போன்ற மற்ற ரசாயங்களும் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம் இயற்கைக்கு மட்டுமல்லாது உடல்நலத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியது. டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம், கர்ப்பப்பை புற்றுநோய், பலவீனமான கரு உருவாவது மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றிற்கும் இந்த இராசயனம் தான் காரணம்.

அதுமட்டுமல்லாமல், இதில் கருப்பை புற்றுநோய் உண்டாகக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த ரசாயனம், 70 நாடுகளால் தடை செய்யப்பட்ட ஒன்று. மேலும் நாப்கின்கள் மருத்துவ தயாரிப்பு என்பதால், அதன் மூலப்பொருள்களும் இதில் குறிப்பிடப்படுவதில்லை. இந்த ரசாயனம் பேடுகளின் உள்புறத்தில் இருந்தால் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் பேடுகளின் விலை மற்றும் உறிஞ்சும் தன்மையையே முதன்மையாக வைத்திருப்பதால், பேடுகளின் வெளிப்புறத்தில் சேர்க்கின்றனர்.

அதனால் தான் இந்த சானிட்டரி நாப்கின்களால் பெரும்பாலான பெண்களுக்கு சருமத்தில் அரிப்பு, அலர்ஜி, சொறி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதேபோல், அதிக நேரம் இந்த நாப்கின்களை பயன்படுத்தினால் பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.

மாதவிடாய் காலத்தில் பேடுகளை அடிக்கடி மாற்றினால் சொறி மற்றும் பல தொற்றுநோய்களில் இருந்து தப்பிக்கலாம். குறைந்து 6 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது பேடுகளை மாற்றிவிடுங்கள்.

காட்டான் உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு 2 முறை உள்ளாடைகளை மாற்றுவதும் சிறந்தது.

மாதவிடாய் காலத்தில் பிறப்புறுப்பை சில மணிநேரங்களுக்கு ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். ரொம்ப சூடாக இருக்க கூடாது.

முக்கியமாக, பிறப்புறுப்பை சோப்பு கொண்டு சுத்தப்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சோப்பில் இருக்கும் கெமிக்கல் உங்களுடைய பிறப்புறுப்பு pH அளவை குறைத்து, வறட்சியை ஏற்படுத்தும்.

தடிப்புகளை போக்க பேபி பவுடரை பயன்படுத்தலாம். ரொம்ப ஹார்ஸான பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்படி மிகவும் ஹார்ஸான பவுடரை பயன்படுத்தினால் அந்த பிரச்சனை மேலும் அதிகரித்து விடும். எனவே, கவனமாக இருங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக ரசாயனங்கள் கொண்ட நாப்கின்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட காட்டன் பேடுகள், காட்டன் துணிகள், மற்றும் மென்ஸ்ட்ருவல் கப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. காட்டன் துணிகளையும் ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website