சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்கள். தலையில் புதுசு புதுசா, சின்ன சின்ன முடிகள் எல்லாம் சீக்கிரம் சீக்கிரமாக வளர தொடங்கும்…!!

January 9, 2023 at 6:27 am
pc

வெங்காயத்தில் நிறைய வகைகள் இருந்தாலும், தலைமுடி வளர்ச்சியை அதிவேகமாக தூண்டுவதற்கு இந்த சின்ன வெங்காயத்தை தான் பயன்படுத்த வேண்டும். தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு எளிமையாக இரண்டே வாரத்தில் தீர்வு கிடைக்க, இரண்டு அழகான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக. தலை முடி நிறைய உதிர்கிறது. உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடிகள் வளரவில்லை என்பவர்களும், இதை பயன்படுத்தலாம். முன் நெற்றியில் வழுக்கை விழுந்தவர்களும் இந்த குறிப்பை பின்பற்றலாம்.

முடி வளர்ச்சியை தூண்டும் சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தை தோலுரித்து தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றாமல் இருந்த சின்ன வெங்காயத்தை அரைத்தால் சாறு நமக்கு கிடைக்கும். சின்ன வெங்காயத்தை அரைக்கும் போது நமக்கு அது லேசான பிங்க் நிறத்தில் கிடைக்கும். அதிலிருந்து வடிகட்டி எடுக்கக்கூடிய சாறும் பிங்க் நிறத்தில் கிடைக்கும்.

அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். 10 லிருந்து 15 வெங்காயத்தை அரைத்து பிழிந்து, சாறு எடுத்த பின்பு, எந்த அளவுக்கு சின்ன வெங்காயத்தின் சாறு இருக்கிறதோ, அதே அளவுக்கு சமபங்கு தண்ணீரை அதில் கலக்க வேண்டும். 1/4 கப் அளவு சின்ன வெங்காய சாறு என்றால், 1/4 கப் அளவு தண்ணீரை அதோடு கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 10 நாட்கள் கெட்டுப் போகாது.


2 நாட்களுக்கு ஒரு முறை, இந்த ஸ்ப்ரேவை உங்களுடைய தலையில் ஸ்கேல்பில் படும்படி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். 1 மணி நேரம் கழித்து, வழக்கம் போல தலைக்கு குளித்துக் கொள்ளலாம். நன்றாக கவனம் செலுத்தி உங்களுடைய வேர்கால்களில் படும்படி இந்த ஸ்ப்ரேவை அடித்து, உங்கள் கையை கொண்டு ஜென்டில் ஆக மசாஜ் செய்து விடுங்கள் போதும்.

தொடர்ந்து இந்த சின்ன வெங்காயச்சாறு உங்களுடைய தலையில் போட்டு வர, தலைமுடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை இந்த சின்ன வெங்காயச்சாறை பயன்படுத்தும் போதே வித்தியாசத்தை உணருவீர்கள். முடி உதிர்வு உடனடியாக கட்டுப்படுத்தப்படும். வேர் கால்கள் பலப்படும்.
இரண்டாவதாக இந்த சின்ன வெங்காயச்சாறு வைத்து இன்னொரு குறிப்பையும் நாம் பின்பற்றலாம். தண்ணீர் ஊற்றாமல் சின்ன வெங்காயச்சாறு இருக்கும் அல்லவா. அதை 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு 2 ஸ்பூன் விளக்கெண்ணெயை சேர்த்து, கலந்து இதை உங்களுடைய வேர்கால்களில் நன்றாக தடவி விட்டு, முன் நெற்றியில் வழுக்கையில்தடவி, 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தாலும் உங்களுடைய தலைமுடி வேகமாக வளர்ச்சி அடையும்.

ஆனால் விளக்கெண்ணெயும் குளிர்ச்சி தரக்கூடியது. சின்ன வெங்காயச் சாறும் குளிர்ச்சி தரக்கூடியது. உங்களுக்கு இவ்வளவு குளிர்ச்சி நிறைந்த பொருட்களை தலையில் போட்டால் தலைபாரம் சளி பிடிக்கும். சைனஸ் பிரச்சனை உள்ளது என்றால் இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. அதேபோல சின்ன வெங்காயச்சாறு லேசாக எரிச்சல் கொடுக்கக் கூடியது. அதில் நாம் தண்ணீர் கலந்தாலும் எரிச்சல் இருக்கத்தான் செய்யும். லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கையில் லேசாக இந்த சாறை ஸ்பிரே செய்து பார்க்கும்போது, உங்களுடைய சருமம் சிவப்பு நிறதில் ஆனாலோ அல்லது அந்த இடத்தில் ரேஷஸ் வந்தாலும் நீங்கள் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website