சின்மயி கூறிய ஆச்சரிய தகவல்..!

February 20, 2024 at 7:12 pm
pc

பொதுவாக பின்னணி பாடகிகள் பாடும் பாடலுக்கு ஏற்றவாறு தான் நடிகைகள் உதட்டசைவு செய்து நடிப்பார்கள் என்பது தெரிந்தது. ஆனால் பாடகி சின்மயி, த்ரிஷா பாடுவது போல் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட காட்சியில் அவரது உதட்டசைவுக்கு ஏற்ப நான் பாடினேன் என்றும் அது எனக்கு சவாலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ’96’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் ’தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலை நீண்ட நாள் கழித்து பார்க்கும் தனது நண்பர்கள் மத்தியில் த்ரிஷா பாடும் காட்சி இடம் பெற்றுள்ளது என்பது தெரிந்தது. இந்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தான் சின்மயி, த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப தான் பாடியதாகவும் த்ரிஷாவின் உதட்டசைவிற்கு ஏற்ற வகையில் பாடியது தனக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது என்றும் தெரிவித்து இருந்தார்

குறிப்பாக குளோசப் காட்சிகளில் த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப பொருத்தமாக பாடியிருந்தேன் என்றும் இந்த வீடியோவை பார்க்கும் போதே உங்களுக்கு அது புரியும் என்றும் த்ரிஷா நடித்த அந்த காட்சியின் வீடியோவையும் சின்மயி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை தற்போது பார்த்த ரசிகர்கள் ’ஆமாம் உண்மையிலேயே நீங்கள் த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமாக பாடி உள்ளீர்கள்’ என்று பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website