சில மூஞ்சிகளை எல்லாம் பார்த்தா வெறுப்பா இருக்குது.

December 29, 2023 at 7:31 pm
pc

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் எலியும் பூனையும் போல ஆரம்பம் முதலே சண்டை போட்டு வருகின்றனர். தினேஷ் குறித்து விசித்ராவும் விசித்ரா குறித்து தினேஷம் சக போட்டியாளர்களிடம் நெகட்டிவாக பேசி வருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேருக்கு நேராகவும் தினமும் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விசித்ராவுக்கும் ரவீனாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. ரவீனா சமையல் டீமில் இருக்கும் நிலையில் பாத்திரத்தை கழுவி கொடுங்கள் என்று விசித்ராவிடம் கேட்கிறார். அதற்கு வெறுப்புடன் வரும் விசித்ரா ’நான் கழுவி கொடுத்தால் தான் நீ சமையல் செய்வாயா? என்று கேட்கிறார்.

‘சமையல் செய்வதற்கு தேவையான பாத்திரங்களை நீங்கள் தானே கழுவி கொடுக்க வேண்டும்’ என்று ரவீனா கூற அதற்கு மீண்டும் விசித்ரா வாக்குவாதம் செய்கிறார். சில மூஞ்சிகளை எல்லாம் பார்க்க வெறுப்பா இருக்குது என்று ரவீனாவை கோபத்துடன் கூறும் காட்சிகளும் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.

இன்றைய புரோமாவில் விசித்ரா இவ்வாறு கூறி இருந்தாலும் அதன் பிறகு விசித்ரா தனது தவறை திருத்திக் கொண்டு, உன்னை நான் தவறாக புரிந்து கொண்டேன் என ரவீனாவிடம் மன்னிப்பு கேட்ட காட்சியும் 24×7 நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website