சிவராஜ்குமாருக்காக செய்யப்படும் புதிய மாற்றம்..! தனுஷின் ‘கேப்டன் மில்லர்’..

October 12, 2023 at 7:06 pm
pc

தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் நடந்து வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தனுஷ் உடன் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என்று கர்நாடக மாநில ரிலீஸ் உரிமையை பெற்ற கேஆர்ஜி நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு ஒப்புக்கொண்டு இந்த படம் கன்னடத்தில் வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சிவராஜ் குமார் நடித்ததற்கே, அந்த காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கர்நாடக மாநிலத்தில் கிடைத்தது. இந்த நிலையில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படம் கர்நாடக மாநிலங்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், பிரியங்கா, சிவராஜ்குமார், சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website