சீனாவில் பெண்களாக மாறிய ஆண்கள்!

March 29, 2023 at 10:04 pm
pc

பெண் மாடல்கள் உள்ளாடைகள் அணிந்து விளம்பரங்களில் தோன்றுவதற்கு சீன அரசுசாங்கம் தடை விதித்துள்ளதால் ஆண்கள் பெண்கள் ஆடைகளில் தோன்றி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். ஆபாசமான விஷயங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிரான சட்டத்தை மீறியதற்காக சீன அரசுசாங்கம் இந்த தடையை விதித்துள்ளது.

இந்நிலையில் பல நிறுவனங்கள் பெண்கள் அணியும் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளன.

அந்தவகையில் , புஷ்-அப் ப்ராக்கள், இறுக்கமான கோர்செட்டுகள் மற்றும் லேஸ் டிரிம் செய்யப்பட்ட நைட் கவுன்கள் உள்ளிட்டவற்றில் ஆண்களே தோன்றுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்ளாடை லைவ்ஸ்ட்ரீம் வணிகத்தின் உரிமையாளர் சூ. ஜியுபாய், தனிப்பட்ட முறையில் வேறு வழியில்லை.

காட்சிப்படுத்தப்படும் பொருட்கள் பெண்களுக்குரியது தான். அரசின் புதிய நடவடிக்கையால், உள்ளாடைகளை பெண்களுக்கு அணிவிக்க முடியாது. அதற்கு பதிலாக ஆண் மாடல்களுக்கு பயன்படுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த லைவ்ஸ்டீரிம் தளம் டிக்டாக்கிலும் இயங்கி வருகிறது. பெண்கள் அணியும் பட்டுத்துணிகளை, ஆண்கள் அணிவித்து லைவ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

அதேசமயம் சீனாவின் பண்பாடு சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாமல், அவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website