“சீமானுடன் இணையத் தயார்” – ஹெச். ராஜா பரபரப்பு!

June 28, 2023 at 9:19 pm
pc

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமானுடன் இணையத் தயார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. தமிழ்நாட்டின் சிவகங்கையில் பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சியில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் தேசிய பிரிவினைவாத கொள்கையை கைவிட்டு விட்டு பகுத்தறிவுடன் சீமான் சிந்திக்க வேண்டும், அப்போது தான் பாஜகவுடன் நெருங்க முடியும்.

தன்னந்தனியாக ஒன்றும் செய்ய முடியாது, எனவே நண்பர் சீமான் அவரது நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டால் அவருடன் பேசுவதற்கு தயார் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது புகைப்படம் வெளியிடாதது குறித்து கேள்வி எழுப்பி ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து புகைப்படம் வெளியிடாதது ஏன்? அவரது உடல்நிலை குறித்து முழு சந்தேகமளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர சினிமா பாப்புலாரிட்டி மட்டும் போதாது, இதற்கு கமல்ஹாசனே ஒரு உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக மோடி வரவில்லையென்றால், பாகிஸ்தான்- இலங்கையை விட இந்தியா பிச்சைக்கார நாடாக மாறியிருக்கும் எனவும் பேசியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website