சுந்தர் சி -யின் அரண்மனை 4 இவ்ளோ வசூல் செய்துள்ளதா?

May 17, 2024 at 12:22 pm
pc

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 பாகம் கடந்த மே 6 -ம் தேதி வெளியானது. இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். மேலும் கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்பு வெளியான அரண்மனை படத்தின் மூன்று பாகங்களுமே டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது. அதேபோல் தற்போது அரண்மனை 4ம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

அரண்மனை 4 திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குடும்பத்துடன் வருவதாக சொல்லப்படுகிறது. இது வரை இப்படம் ரூபாய் 46 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website