சுருட்டை முடியால் நீங்கள் நினைத்த ஹேர் ஸ்டைல் செய்ய முடியவில்லையா? முடி ஸ்மூத்தாக மாற்ற இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க…!!

November 28, 2022 at 7:02 am
pc

பெண்களுக்கு நல்ல சுருட்டை, சுருட்டையாக முடி இருந்தால் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும். கேரள பெண்களின் அழகிற்கு பாதி காரணமே அவர்களின் இந்த முடி தான். நல்ல கருகருவென்று சுருண்டு நீண்டு இருக்கும் இந்த முடி பார்க்க எந்த அளவிற்கு அழகாக இருக்கிறதோ, அதே அளவு அதை பராமரிப்பதிலும் சிரமம் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொள்ள தான் வேண்டும். இந்த சுருட்டை முடி உள்ளவர்களால் நினைத்த ஹேர் ஸ்டைல் செய்ய முடியாது. இது போல பிரச்சனை வராமல் இருக்க சுருட்டை முடி உள்ளவர்களும் இனி அவர்கள் நினைத்த ஹேர் ஸ்டைலை செய்ய இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.

இந்த சுருட்டை முடியை நேராக்க ஸ்மூத்தனிங், ஸ்ட்ரெயிட்னிங் போன்ற பல முறைகள் வந்து விட்டாலும், இவையெல்லாம் செய்யும் பொழுது முடி பெரும்பாலும் பாதிப்பு அடைந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணும் போது திரும்பவும் பழைய நிலைக்கு உடனே மாறவும் செய்யாது. இந்தப் பிரச்சனையை சரி செய்ய நம் வீட்டில் சுலபமான ஒன்று இரண்டு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் எவ்வளவு எளிமையாக இருக்கும்.

இதற்கு ஆளி விதைகள் நல்ல பலன் கொடுக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் இந்த ஆளி விதையை சேர்த்த பிறகு அது ஒரு ஜெல் பதத்திற்கு வந்து விடும். இது கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும் போதே வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

கட்டியாகி விட்டால் வடிகட்ட முடியாது. இந்த ஜெல்அறிய பிறகு உங்கள் முடியின் வேர்க்கால் முதல், அடி முடி வரை தேய்த்து பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு நீங்கள் எப்பொழுதும் போல் குளித்து விடுங்கள். உங்களுடைய சுருட்டை முடிகள் ஓரளவிற்கு ஸ்ட்ரைட் ஆக மாறி விடும். நீங்கள் செய்ய நினைக்கும் ஹேர் ஸ்டைலை செய்து கொள்ளலாம்.

இதே முறையில் முட்டையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளை கருவை எடுத்து நீங்கள் குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு உங்கள் தலைகளில் தேய்த்து இதை போல் ஊற வைத்து அதன் பிறகு குளித்தால், அப்போதும் முடி உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல ஷைனிங்காக சுருண்டு போகாமல் இருக்கும்.
அடுத்து சாதம் வடித்த கஞ்சி இந்த முறையை மட்டும் நாம் உடனடியாக செய்ய முடியாது சாதம் வடித்த கஞ்சை ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்து நன்றாக புளிக்க விட்டு, அடுத்த நாள் அதில் ஆலுவேரா ஜெல்லை சேர்த்து அதை தலையில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளிக்கும் போது அதிலும் இதே போல உங்கள் சுருட்ட முடியும் ஓரளவிற்கு உடனடியாக மாறிவிடும்.

இதை நீங்கள் குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு தேய்த்து அதன் பிறகு எப்போதும் போல குளிக்கலாம். அல்லது குளித்து முடித்த பிறகு கடைசியாக இதை தலையில் சேர்த்து பிறகு ஷாம்பு ஏதும் போடாமல் அப்படியே அலசி கொள்ளலாம். இரண்டு வழிகளில் எதை செய்தாலும் உங்களுடைய சுருட்டை முடி உடனடியாக சைனாக மாற உதவியாக இருக்கும்.

இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்களுக்கு உடனடியாக பலன் அளிக்கும். இதைத் தொடர்ந்து செய்யும் போது நிரந்தரமாக உங்கள் முடி சுருண்டு போகாமல் மாறும். இயற்கை முறையை பொருத்த வரையில் கொஞ்சம் காலம் எடுத்து தான் சரி செய்து கொடுக்கும் முயற்சி செய்து பாருங்கள்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website