சூப்பர்ஸ்டார் படத்தில் மூன்றுஹீரோயினிகள்,யார் யார் ?

October 3, 2023 at 6:12 pm
pc

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 170’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியாகி கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இன்று இந்த படத்தில் நடிக்கும் நாயகிகள் குறித்து அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக இன்று காலை துஷாரா விஜயன் இந்த படத்தில் இணைந்த உள்ளதாகவும் மதியம் ரித்திகா சிங் இணைந்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டதை அடுத்து சற்றுமுன் இந்த படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இன்னும் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்பதை அடுத்து வரும் அப்டேட்டுகளில் இருந்து தெரியவரும்.

ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் திசையில் உருவாகும் ’தலைவர் 170’ திரைப்படம் ’ஜெயிலர்’ படம் போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மற்றொரு மாபெரும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website