செக்ஸியாக இல்லை… சிறிய மார்பகத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்… வருத்தப்பட்ட பிரபல நடிகை!

June 14, 2022 at 1:14 pm
pc

மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக பிரபல நடிகை வருத்தப்பட்டுள்ளார்.

சிறிய மார்பகங்களால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்ததாக பிரபல நடிகை வேதனை பட்டுள்ளார். 

பாலிவுட்டில் தமிழ் நடிகை

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே.

சவாலான கேரக்டர்கள்

தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, ரஜினிகாந்துடன் கபாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார் ராதிகா ஆப்தே. இயக்குநர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை உள்வாங்கிக் கொண்டு கொடுப்பவர் ராதிகா ஆப்தே. அதிலும் சவாலான கேரக்டர்கள் என்றால் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவார் ராதிகா ஆப்தே

நிர்வாண படங்கள்

இதனாலேயே இயக்குநர்களின் முதல் தேர்வாக உள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் நடிகை ராதிகா ஆப்தே. அடிக்கடி அவரது நிர்வாண படங்கள் கசிந்து பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் வருத்தப்பட்டு பேசியுள்ளார் ராதிகா ஆப்தே.

செக்ஸியாக இல்லை

அதாவது தான் ஒல்லியாக இருப்பதால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஒப்பந்தமான படங்களில் இருந்து தான் நீக்கப்படுவது குறித்து கேட்டால், உங்களுக்கு மார்பகம் பெரிதாக இல்லை, நீங்கள் பார்ப்பதற்கு செக்ஸியாக இல்லை என்று கூறுவார்கள்.

அதனால் உங்களுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து விட்டோம் என்றும் தெரிவிப்பார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதோடு தலைமுடியை கூட மாற்ற சொல்வார்கள் , கலரிங் செய்ய சொல்வார்கள் என்றும் தெரிவித்துள்ள ராதிகா ஆப்தே அதன் பிறகு தான் தன் உடலை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்ததாக கூறியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website