செஸ் ஒலிம்பியாட் 3-வது சுற்று: தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி!

August 1, 2022 at 12:06 pm
pc

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. அதில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே நடந்து முடிந்த 2 சுற்றுகளிலும் நந்திதா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website