சோதனைக்குழாய் மூலம் கருவுறுதல் எந்த வயதில் செய்யலாம்?பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…

June 17, 2022 at 5:09 pm
pc

சோதனைக் குழாய் கருவூட்டல் என்பது ஒரு ஆணின் விந்தணுவையும் ஒரு பெண்ணின் கரு முட்டையையும் எடுத்து ஆய்வக கூடத்தில் வைத்து கருவூட்டல் செய்யும் முறையாகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்ற பிறகு அதை பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க வைக்கின்றனர். இந்த சோதனைக் குழாய் கருவூட்டல் முறையானது நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் ஒரே தடவையில் தீர்வு கிடைப்பதில்லை. பரிசோதனையின் முடிவுகள் சரியாக பெற ஒன்றுக்கு மேற்பட்ட முறை சோதனைக் குழாய் கருவூட்டல் செய்ய வேண்டியிருக்கும்.

இயற்கையான கருவுறுதலில் தோல்வியுற்ற பெண்களுக்கு, ஃபலோபியன் குழாய்கள் அடைக்கப்பட்ட பெண்களுக்கு இது தான் ஒரே வழி. சோதனைக் குழாய் கருவூட்டல் முறை இவர்களுக்கு பயனுள்ள முறைகளில் ஒன்றாகும்.

இருப்பினும் இதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை கணக்கிட இயலாது. சில பேருக்கு 2 தடவையிலயே வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நிறைய தடவை சோதனைக் குழாய் கருவூட்டல் முறையை செய்ய வேண்டியிருக்கும்.

​சோதனைக் குழாய் கருவூட்டல் முறை தாமதம் வேண்டாம் !

நிறைய தம்பதிகள் இயற்கையான கருவுறுதல் நடக்கும் நடக்கும் என காலத்தை தள்ளிப் போடுகின்றனர். இதனால் பரிசோதனைக்கு பிறகு சோதனைக் குழாய் கருவூட்டல் முறை அவசியம் என்னும் போது அவை தோல்விக்கு காரணமாகிறது. 

எனவே ஒரு தம்பதியினர் கருவுறாமைக்கான முதல் அறிகுறியைக் கண்டவுடன் விரைவில் மருத்துவ நிபுணரை அணுகி அவரின் ஆலோசனை பேரில் சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக சோதனைக் குழாய் கருவூட்டல் முறையை பரிந்துரை செய்தால் தாமதிக்க கூடாது.

சோதனைக் குழாய் கருவூட்டல் முறை சிக்கல்கள்

பொதுவாக 30 – 40 வயதுடைய பெண்களுக்கு சோதனைக் குழாய் கருவூட்டல் முறை சிறந்தது. 40 வயதுக்கு மேல் வெற்றி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. சோதனைக் குழாய் கருவூட்டல் முறை மூலம் 40 மற்றும் 50 வயதுடைய பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பும் மற்றும் வெற்றிகரமான வழக்குகள் இருந்தாலும், நோயாளியின் வயதுக்கு ஏற்ப வெற்றி விகிதம் குறைகிறது.

இந்த வயதில் கர்ப்ப கால சிக்கல்களும் அதிகமாக உள்ளது. கர்ப்பகால நீரிழிவு நோய், ப்ரீக்ளாம்ப்சியா, கருச்சிதைவு மற்றும் மரபணு குறைபாடுகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது. வயதான பெண்களின் கருமுட்டைகள் கருவுற்று இருந்தா லும் அவை கர்ப்பப்பையில் பொருத்துவதற்கு அதிக நேரம் எடுக்கின்றன. மேலும் இதை வெற்றிகரமாக மாற்றுவது என்பது மருத்துவர்களுக்கு சவாலான ஒன்றாக உள்ளது. 

​சோதனைக்குழாய் கருவுறுதலில் வெற்றி

சோதனைக்குழாய் கருவுறுதல் சிகிச்சை செய்யும் போது அது வெற்றி பெற பல காரணங்கள் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக சிகிச்சை பெறும் ஆணின் விந்தணு அல்லது முட்டையின் திறனைப் பொறுத்து வெற்றி விகிதம் மேம்படலாம். 37 வயதிற்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க திறன் குறைய வாய்ப்பு உள்ளது.

விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் இருக்கும் தம்பதியினர் சிகிச்சை பெறும் போது சோதனைக் குழாய் கருவூட்டல் முறை வெற்றியடைவது தாமதமாகும், இதனால் மனச்சோர்வு, பதட்டம் ஏற்படலாம். 

​சோதனைக்குழாய் கருவூட்டல் முறையில் கருமுட்டை, விந்தணு தானம்!

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சோதனைக்குழாய் கருவூட்டல் முறையில் கருத்தரிக்க விரும்பினால் அதிக வாய்ப்பை பெற இளம் முட்டைகளை பயன் படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. இளம் கருமுட்டைகளை நன்கொடையாளரி டமிருந்து பெற்று சோதனைக் குழாய் கருவூட்டல் முறை மூலம் கருத்தரிப்பதை சாத்தியமாக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சோதனைக் குழாய் கருவூட்டல் முறையானது உலகெங்கிலும் உள்ள பல தம்பதிகளுக்கு உதவியுள்ளது. இயற்கையான கர்ப்பத்தைப் போலவே, வயதுக்கு ஏற்ப சோதனைக் குழாய் கருவூட்டல் வெற்றி விகிதமும் உள்ளது. எனவே குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியர் காலந்தாழ்த்தாமல் உரிய நேரத்தில் மருத்துவரின் ஆலோசனை பேரில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவசியமெனில் சோதனைக் குழாய் கருவூட்டல் முறையை செய்துகொள்ள வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website