ஜப்பான் நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா.. நயனுக்கு போட்டியா?

October 12, 2023 at 8:02 pm
pc

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய அழகு நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் தூதராக இணைந்திருப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அழகு என்பது வெளிப்புறத் தோற்றம், தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெறுவது என்பதை தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த நிறுவனத்தின் அழகு சாதன, ஸ்கின் கேர் தயாரிப்பு பொருட்கள் குறித்து அவர் அதில் விளக்கமாக கூறியுள்ளார். இந்த நிறுவனத்தின் பொருள்கள் ஸ்கின்களை பாதுகாக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா சமீபத்தில் 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் அழகு நிறுவனத்தை தொடங்கி உள்ள நிலையில் ஜப்பான் நாட்டின் அழகு சாதன ஸ்கின் கேர் நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website