ஜவான் படத்தில் நடிக்க கோடியில் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி!

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தாம் ஜவான். இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அவர், இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூபாய் 21 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.