ஜுடோ ரத்தினம் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

January 27, 2023 at 11:56 am
pc

ஸ்டண்ட் மாஸ்டர் ஜுடோ ரத்தினம் (94) நேற்று காலமானார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கும் சண்டை பயிற்சி அளித்த இவர், சொந்த ஊரான குடியாத்தத்தில் வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜுடோ ரத்னத்தின் உதவியாளர்கள் பலர் சண்டை பயிற்சியாளராக இருக்கிறார்கள். சண்டை பயிற்சியில் தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் என அவர் தெரிவித்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website