ஜெயிலருக்காக ரஜினிக்கு கிடைத்த அதே பிஎம்டபிள்யூ கார்.. காசு கொடுத்து வாங்கி சூரி அசத்தல்..!

ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது என்பது தெரிந்ததே. அதே மாடல் பிஎம்டபிள்யூ காரை நடிகர் சூரி காசு கொடுத்து வாங்கி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூரி 1998 ஆம் ஆண்டு ’மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் ’சங்கமம்’ உள்பட ஒரு சில படங்களில் பிரபலமாகாத கேரக்டரில் நடித்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கேரக்டரில் நடித்தார்.
நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த படம் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற படம் தான் என்பதும் அதில் பரோட்டா சாப்பிடும் கேரக்டரில் நடித்த நிலையில் அவரை பரோட்டா சூரி என்று சில ஆண்டுகள் அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அஜித், விஜய் உட்பட பல பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இன்று ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்துள்ள நடிகர் சூரி தற்போது பிஎம்டபிள்யூ கார் வாங்கியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.