ஜெயிலர்’, ‘கேப்டன் மில்லர்’ படங்களை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் சிவராஜ்குமார்.

January 5, 2024 at 7:11 pm
pc

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். மேலும் அவர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய நடிகர் திரைப்படத்தில் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிவராஜ்குமார் தென்னிந்தியா முழுவதும் தற்போது பிரபலமாகி விட்டார் என்பதும் அவர் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ’ஜெயிலர்’, ’கேப்டன் மில்லர்’ படங்களை அடுத்து ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். புச்சிபாபு இயக்கத்தில் உருவாக இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார்.

ராம்சரண் தேஜா, சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, சாய் பல்லவி, ஏஆர் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website