‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு….குவியும் லைக்ஸ்

August 22, 2022 at 3:37 pm
pc

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். அனிரூத் இசை அமைக்க உள்ள இந்த திரைப்படத்தை, ரஜினிகாந்தின் எந்திரன், பேட்ட, அண்ணாத்த போன்ற படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட தோற்றத்தைப் பகிர்ந்துள்ள சன் பிக்சர்ஸ், ” ஜெயிலர் இன்று தனது ஆக்‌ஷனை தொடங்குகிறார்’ என்று பதிவிட்டுள்ளது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website