ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டு வருமாறு ரகசிய உத்தரவிட்ட புடின்!

July 19, 2023 at 10:48 am
pc

வாக்னர் கூலிப்படையின் ஆயுதக் கிளர்ச்சி தோல்வியில் முடிந்த சில நாட்களில், ஜெலென்ஸ்கி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாக்னர் கூலிப்படை தலைவருக்கு உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை முடித்துக் கொள்ள போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

ஆனால், மிக ரகசியமாக அவர் ரஷ்யாவுக்கு வரவழைக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது விளாடிமிர் புடின் ஆதரவுடன் எவ்ஜெனி பிரிகோஜின் மிகக் கொடூரமான நடவடிக்கையில் களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவருகிறது.

அதில், முதன்மையானதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தலையை ரஷ்யாவுக்கு கொண்டுவருவதே என கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஜூன் 29ம் திகதி ஜனாதிபதி புடின் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜினுடன் ரகசிய சந்திப்பை முன்னெடுத்தார் என்பதை கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, வாக்னர் கூலிப்படையின் ஒரு பிரிவினர் ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, விளாடிமிர் புடினுக்கே சவால் விடுக்கப்பட்ட சம்பவத்தின் ஐந்தாவது நாள் இந்த நேரடி சந்திப்பானது நடந்துள்ளது.

மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி தொடர்பில் முன்னரே தகவல் அறிந்திருந்த முக்கிய தளபதிகள் மீது புடின் கடும் கோபத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. தொலைக்காட்சியில், வாக்னர் கூலிப்படையினரை துரோகிகள் என பட்டம் சுமத்தியவர், ஐந்து நாட்களுக்கு பின்னர் ரகசிய சந்திப்பை முன்னெடுத்துள்ளார்.

ஆனால், இந்த நாடகம் என்பது, புடினின் நெருங்கிய வட்டாரத்தை குழப்பவும், அவர்கள் ஏதேனும் சதி திட்டம் தீட்டினால், அதை முறியடிக்கவும் நடத்தப்பட்ட சூழ்ச்சி என்றே கூறுகின்றனர்.

வாக்னர் கூலிப்படை தலைவர் மற்றும் புடினின் ரகசிய சந்திப்பு தொடர்பில் பிரான்ஸ் பத்திரிக்கையே முதல்முதலில் தகவல் வெளியிட்டுள்ளது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில்,

சுமார் 3 மணி நேரம் நீண்ட இந்த ரகசிய சந்திப்பில், எவ்ஜெனி பிரிகோஜின் உட்பட 35 உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளதாக உறுதி செய்துள்ளார்.

இந்த சந்திப்பின் போதே, வாக்னர் கூலிப்படை தலைவருக்கு, ஜெலென்ஸ்கியின் தலையை கொண்டுவர புடின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website