டிவி நடிகை டாக்டர் ஷர்மிளாவை வெளுத்து வாங்கிய பயில்வான்!

September 10, 2022 at 5:23 pm
pc

பிரபல பத்திரிகையாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். சினமாத்துறையில் நடக்கும் திரை மறைவு ரகசியங்கள் குறித்த தகவலையும் நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்கங்கள் குறித்த தகவல்களையும் தனது யூட்யூப் சேனலில் வீடியோவாக பேசி வெளியிட்டு வருகிறார்.

அசராத பயில்வான்

அவரது வீடியோக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசுகிறார் என போலீஸில் கூட புகார் அளித்துள்ளனர். ஆனால் உள்ளதைதான் பேசுகிறேன் இல்லாததை பேசவில்லை என தொடர்ந்து தனது வேலையை பார்த்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை ஷர்மிளா

இந்நிலையில் டிவி நடிகையான ஷர்மிளா தனது யூட்யூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை பார்த்து கடுப்பான பயில்வான் ரங்கநாதன், ஷர்மிளாவுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “3 முறை விவாகரத்து பெற்ற நடிகை என்னைப்பற்றி பேசியிருக்கிறார். முதலில் என்னைப் பற்றி சொல்கிறேன். எனக்கு ஒரே மனைவி, 2 மகள், ஒரு மகன்.

பலான நிகழ்ச்சி

நான் சினிமாவில் நடிகன்தான். ஆனால் எனக்கு காதலியும் இல்லை, செட்டப்பும் இல்லை. நான் அவதூறாவும் அசிங்கமாகவும் பேசுவதாக டிவி நடிகையும் டாக்டருமான ஷர்மிளா என்னைப் பற்றி பேசியிருக்கிறார். ஏம்மா ஷர்மிளா எந்த நிகழ்ச்சி மூலம் நீ பிரபலமானாய்? விஜய் டிவியில் இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஒளிபரப்பாகும் புதிரும் புனிதமும் நிகழ்ச்சியின் மூலம்தானே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனாய்.

3 திருமணம்

டாக்டர் மாத்ருபூதம் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்வார். அப்போது நேயர்கள் கேட்கும் கேள்விகளை படித்து மருத்துவரிடம் சொல்வார் ஷர்மிளா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் பிரபலமானார். ஷர்மிளா நீங்களே பலான நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிவிட்டு, நான் அருவருப்பாக பேசுவதாக சொல்லலாமா? நீங்கள் 3 திருமணம் செய்தவர். நான் எதையும் திரித்து பேசவில்லை. இதற்கு விக்கிப்பீடியாதான் ஆதாரம்.

நானும் ஷர்மிளாவும் 2, 3 சீரியல்களில் ஒன்றாக நடித்தோம். அதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அதில் எந்த நடிகையும் ஷர்மிளாவிடம் பேசமாட்டார்கள். நான் ஆபாசமாக பேசினால் என் சேனலை பிளாக் செய்து விடுவார்கள். நான் பத்திரிகையாளர் யூட்யூப் சேனல் நடத்துகிறேன். நீங்கள் டாக்டர்தானே கிளினிக் நடத்தி சம்பாதிக்கலாமே. ஏன் யூட்யூப் சேனல் நடத்துகிறீர்கள்? டாக்டர் தொழிலை பார்க்காமல் நீங்கள் நடிக்க வந்தது பணத்துக்கும் புகழுக்கும்தானே”… இவ்வாறு கேட்டு விளாசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website