டென்ஷனை சமாளிப்பது எப்படி?கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…

June 30, 2022 at 10:32 am
pc
  • நம் மனதில் இருக்கும் கஷ்டங்கள், பிரச்சனைகள், பதட்டங்கள் ஆகியவற்றை நம் நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பகிர்ந்து கொல்வதன் மூலம் டென்ஷனை தவிர்த்து கொள்ள முடியும். அப்படி பகிர்வதன் மூலம் மனதிலிருக்கும் பாரம் குறையும் மனம் லேசாகும் அது டென்ஷனை குறைக்கும்.
  • சிறிது நேரம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சனையிலிருந்து விலகி சினிமா, கடற்கரை, விளையாட்டு, நூலகம் என்று எதிலாவது ஈடுபடுங்கள்.
  • முன்கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். டென்னிஸ், நடனம், நீச்சல், ஓட்டம் ஆகியவை படபடப்பைத் தவிர்க்க உதவும்.
  • விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை மிகவும் அவசியம். உங்கள் மீது சிறு தவறு இல்லையெனிலும் உங்கள் மீது சுமத்தப்பட்ட பழிக்காக வருந்தாதீர்கள்.
  • ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டும் செய்யுங்கள். பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யாதீர்கள். ஆத்திரமூட்டுவதே அவசரத் துடிப்புதான்.
  • விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். நண்பர்களிடமிருந்து நல்ல குணங்களை மட்டும் பாருங்கள். தீயவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
  • உங்களோடு போட்டியிட வருபவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் அந்த நேரத்தில் நீங்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
  • உங்களை ஒதுக்கி தள்ளும்போது நிறையவே முயற்சி செய்யுங்கள். டென்ஷனை தவிர்க்க பொழுதுபோக்கே அதிகம் உதவும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website