டெலிவரி பாயை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய நபர்!

April 28, 2023 at 11:02 am
pc

அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சேர்ந்த ரண்டால் கூக் என்பவர், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக பணியாற்றி வந்தார். இவர் நாள்தோறும் காலை முதல் இரவு வரை தனக்கு வரும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிவந்தார்.

இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி ரண்டால் கூக் உணவு டெலிவரி செய்தார். அப்போது மனைவி போன்செய்தபோது எடுக்கவில்லை. இதனை சிறிது நேரத்துக்குபின் பார்த்த ரண்டால் கூக், கடைசி டெலிவரியை முடித்து விட்டதாகவும், விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூக் தனது மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதன்பின்னர் வெகுநேரம் ஆகியும் கூக் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த மனைவி உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கடைசியாக கூக் டெலிவரி செய்து விட்டு லாக் ஆஃப் செய்த லொகேஷனை அந்நிறுவனம் வழங்கியது. அதனையும் வைத்து கூக் மனைவி, தனது கணவரை கண்டுபிடித்துதர போலீசில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில், கூக் கடைசியாக டெலிவரி செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஆஸ்கர் சோலிஸ் என்பவர், கூக்-கை கொலை செய்து, அவரது உடல் உறுப்புகளை தனித்தனியாக வெட்டி பையில் அடைத்து குப்பையில் வீசியது தெரியவந்தது. இந்த கொடூரத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website