டேஸ்டியான கோவைக்காய் சப்ஜி செய்து எல்லாரையும் அசத்துங்க …!!

October 3, 2022 at 11:10 am
pc
தேவையான பொருட்கள்:

கோவக்காய் – 1 கப் ( நீளமாக நறுக்கவும்)
தக்காளி – 3
தனியா தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
கரம் மசாலா தூள் – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 15 ( தண்ணீரில் ஊற வைக்கவும்)
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து சிறிதளவு உப்பு போட்டு கோவக்காயை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.(அறுசுவையும் ஆரோக்கியமும்) வடிகட்டிய அதே சுடுதண்ணீரில் தக்காளியை போட்டு வேக வைத்து தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். தேங்காய், ஊற வைத்த முந்திரி பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வேக வைத்த கோவக்காயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.(அறுசுவையும் ஆரோக்கியமும்) அதே கடாயில் சிறிதளவு சீரகம் போட்டு பொரிந்ததும் அரைத்த தக்காளி சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி பச்சை வாசனை போகுமாறு 3 நிமிடங்கள் கிளறி கொதிக்க விடவும்.

வறுத்த கோவக்காயை தக்காளியில் போட்டு தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி விடவும். (அறுசுவையும் ஆரோக்கியமும்) அதனுடன் அரைத்த தேங்காய், முந்திரி கலவையை சேர்த்து கரம் மசாலா இட்டு 3 நிமிடங்கள் கழிந்து அடுப்பை அணைக்கவும்.
கோவக்காய் சப்ஜி ரெடி!

குறிப்பு:

வெப்ப மண்டல பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக இது வளரும் தாவரமாகும்.
கொவ்வைப்பழம் என்பது நல்ல தமிழ் வார்த்தையாகும்.

கோவக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுத்தும் தன்மை கொண்டது.

தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காயை சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என மருத்துவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு தெரிவித்துள்ளனர்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீக்கும் சக்தி உடையது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website