டைட்டானிக் திரைப்பட நடிகைக்கு சுவிட்சர்லாந்தில் விருது!!Golden Icon விருது….

August 8, 2024 at 3:06 pm
pc

பிரபல பிரித்தானிய நடிகையான கேட் வின்ஸ்லட் புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும், டைட்டானிக் என்னும் திரைப்படம், உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்த்தது.

விருதுகளைக் குவித்த சிறந்த நடிகை

ஆனால், அவர் டைட்டானிக் திரைப்படத்தில் மட்டுமல்ல, period dramas என்னும் பல புகழ் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படங்களிலும் நடித்தவர் ஆவார்.

ஒரு அகாடமி விருது, ஒரு கிராமி விருது, இரண்டு Primetime எம்மி விருதுகள், ஐந்து BAFTA விருதுகள் மற்றும் ஐந்து Golden Globe விருதுகள் பெற்ற கேட் வின்ஸ்லட், பிரித்தானியாவின் உயரிய விருதான Commander of the Order of the British Empire (CBE) விருதும் பெற்றவர் ஆவார்.

டைட்டானிக் திரைப்பட நடிகைக்கு சுவிட்சர்லாந்தில் விருது

இந்நிலையில், அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, சூரிச்சில் நடைபெற உள்ள சூரிச் திரைப்பட விழாவில் நட்சத்திர விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார் கேட் வின்ஸ்லட்.

அந்த விழாவில், கேட் வின்ஸ்லட்டுக்கு, அவரது தலைசிறந்த நடிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணிக்காக, Golden Icon என்னும் விருதும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website